இயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுவிப்பு! பத்து வருடங்களுக்குப்பின் தீர்ப்பு!

0
178
Director bala went out from the case
Director bala went out from the case

இயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுவிப்பு! பத்து வருடங்களுக்குப்பின் தீர்ப்பு!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.சேது என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர்ரக அறிமுகம் ஆனார்.1999ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது.இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்தார்.இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் விக்ரமின் நடிப்பும் கதாபாத்திரமும் பெருமளவில் பேசப்பட்டது.

சேது திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருதைப் பெற்றது.மேலும் முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் பாலா சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்றார்.இந்தியாவின் பிரபல விருதான பிலிம்பேர் விருதையும் பாலா சிறந்த இயக்குநருக்காக பெற்றார்.அதற்குப் பின் இயக்குனர் பாலா நந்தா,பிதாமகன்,நான் கடவுள் போன்ற திரைப்படங்களையும் இயக்கினார்.நான் கடவுள் திரைப்படத்திற்காக பாலா மீண்டும் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன் பின்னர் அவர் அவன் இவன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தத் திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்தார்.2011ம் ஆண்டு இந்த படம் வெளியானது.இந்தப் படத்தின் கதையானது மிகவும் அழுத்தமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டிருந்தது.இந்தத் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானம் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சிகள் சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை குறித்து அவதூறைப் பரப்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதாக சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கராத்மஜன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது.இயக்குனர் பாலா இந்த திரைப்படத்தில் மனதார அவதூறு பரப்பும் விதமாக எதுவும் செய்யவில்லை என நீதிபதி கார்த்திகேயன் கூறி பாலாவை இந்த வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி வருத்தம் தெரிவித்தால் வழக்கிலிருந்து வெளியே வந்து விட்டனர்.இதனிடையே இயக்குனர் பாலா பொய் வழக்கிலிருந்து விடுபட்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

Previous articleமக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!
Next articleகளமிறங்கும் நடராஜன்! தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி!