ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கணை! எதற்கு தெரியுமா?

0
155
Poland athelete auction her silver medal
Poland athelete auction her silver medal

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கணை! எதற்கு தெரியுமா?

போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற தடகள வீராங்கணை மரியா ஆண்ட்ரிஜெக்.இவர் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் விளையாடுபவர்.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடினர்.இவரின் திறமையான முயற்சியால் ஒலிம்பிக்கில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

மரியா ஆண்ட்ரிஜெக் டோக்கியோ ஒலிம்பிக்கில் 64.61 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இதனால் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.இது ஒலிம்பிக்கில் இவர் வெல்லும் முதல் பதக்கமாகும்.25 வயதான இவர் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இவர் கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் 64.78 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.

மேலும் இவர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.முன்னதாக 2015ல் நடைபெற்ற ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் முதல் இடத்தைப் பிடித்தார்.மரியா ஆண்ட்ரிஜெக் தன்னுடைய ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் பணம் திரட்ட முடிவு செய்தார்.போலந்து நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் இல்லாமல் அந்த குழந்தையின் தாய் கஷ்டப்பட்டு வருவதை அறிந்த இவர் அவருக்கு உதவி செய்ய முடிவு எடுத்தார்.

இதனால் அவரது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை அவர் ஏலம் விட்டார்.அந்த குழந்தையின் உயிரே முக்கியம்.தன்னுடைய பதக்கம் முக்கியமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.பின்னர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜாப்கா சூப் மார்க்கெட் நிறுவனம் அந்தப் பதக்கத்தை ஏலத்தில் எடுத்தது.இந்த நிறுவனம் அந்தப் பதக்கத்தை சுமார் 93 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.ஏலம் எடுத்த பின்னர் அந்த பதக்கத்தை மீண்டும் மரியா ஆண்ட்ரிஜெக்கிடமே அந்த நிறுவனம் திருப்பிக் கொடுத்துள்ளது.இந்த செயலை அடுத்து போலந்து நாட்டு மக்கள் மரியா ஆண்ட்ரிஜெக்கின் செயலை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleதனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!
Next articleபுளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!