நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர்.
நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியான கேரளா சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.அதனால் நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு மட்டும் ஓர் நாள் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர்.நாளை உள்ளூர் விடுமுறை என்பதால் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் ஏதும் செயல்படாது என்று கூறியுள்ளனர்.
அதேபோல கன்னியாகுமரி தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலம் சம்பந்தப்பட்ட அவசர பணிகள் எப்பொழுதும் போல நடைபெறும் என கூறியுள்ளனர்.இந்த விடுமுறையை ஈடு செய்ய செப்டம்பர் 11 ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று கூறியுள்ளார்.மேலும் அவசர செயல்பாடுகளில் செயல்படும் அரசு வேலைகள் தவிர இதர வேலைகள் ஏதும் செயல்படாது.அதனால் மக்கள் உங்களுக்கு ஏதேனும் அரசு அலுவலங்களில் ஏதேனும் வேலைகள் இருந்தால் அதை இன்றே விரைந்து முடித்திடுங்கள்.
அதுமட்டுமின்றி நாளை உள்ளூர் விடுமுறை நாள் என்பதால் மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பது நல்லது.தற்பொழுது தான் தொற்றிலிருந்து அனைவரும் சிறிது சிறிதாக மீண்டு வருகிறோம்.இவ்வாறு இருக்கும் சூழலில் மக்கள் கோவில்கள் போன்றவற்றில் அதிகளவு கூட்டம் கூடினால் மீண்டும் அதிகளவு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் கூறியுள்ளனர்.மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.