பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே சிலையை அகற்றிய பரிதாபம்!
தற்பொழுது ஆட்சியில் அவரவர் தொண்டர்கள் மேலிடத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை காட்ட பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தற்போது அதிக பிரபலம் அடைந்து வருகிறது.அது என்னவென்றால் தலைவர்களுக்கு கோவில் கட்டுவது தான்.அதிலும் குறிப்பாக இந்த கட்சியினர் போன்ற கோவில்கள் கட்டக்கூடாது என்று பல்வேறு நுணுக்கங்களை ஈடுபடுத்தி கோவில்களை கட்டி வருகின்றனர்.தெய்வங்களை கருவறைக்குள் வைத்து வணங்கிய காலம் போகி தற்பொழுது மக்களே தேர்ந்தெடுக்கும் தலைவர்களில் கருவறைக்குள் வைத்து வணங்கும் காலம் வந்துவிட்டது.
இது சற்று வேதனைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.அந்த வகையில் பூனே அவுந்த் பகுதியை சேர்ந்தவர் மயூர் முண்டே.இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் ,பிரதமர் மோடிக்கு தொண்டராக அதிக பற்று உள்ளவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய மோடிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பலமுறை இவர் யோசித்து வந்துள்ளார்.யாரும் செய்யாதவாறு நான் செய்ய வேண்டும் என்று எண்ணி அவரது சொந்த இடத்திலேயே பிரதமர் மோடியின் உருவ சிலை வைத்து ஒரு லட்சத்துக்கும் மேலாக செலவு செய்து கோவில் ஒன்றை கட்டினார்.
இந்த கோவில் கட்டிய பிறகு தொண்டரான மயூர் முண்டே-ரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.அவர் பதில் கூறியது ,பாஜக கட்சியின் தலைவர் பிரதமர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல நல்ல திட்டங்களை செய்துள்ளார்.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அந்தஸ்து கூறிய 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கியது முதல் ராமர் கோவில் கட்டுவது வரை பலவற்றை செய்துள்ளார்.அவரை கௌரவிக்கும் விதமாக என்னால் செய்ய முடிந்தது இது மட்டுமே என்று கூறினார்.
கோவில் திறந்து ஒரு நாளிலேயே பிரதமர் மோடியின் சிலையை அவரே அகற்றி விட்டார். காரணம் அறியாமல் பலர் பாஜக தொண்டரான மயூர் முண்டே- இடம் கேள்வி கேட்டு வந்தனர். யாருக்கும் பதில் கூறாமல் தற்பொழுது வரையில் மௌனத்தை கடைபிடித்து வருகிறார். இவரும் பதில் கூறாமல் இருப்பதால் இதற்கு காரணம் யாரேனும் அவரை மிரட்டி உள்ளார்களா அல்லது பாஜக தலைவர் பிரதமர் மோடி அவர்கள் செய்த தவறுகள் ஏதேனும் அவருக்கும் புலம்பட்டு விட்டதா என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இது நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் மோடிக்கு கட்டப்பட்ட கோவிலின் முன்னே காங்கிரஸ் கட்சியினர் திடீரென்று போராட்டம் செய்தனர்.அந்தக் கட்சியின் பூனே நகர பிரிவு தலைவர் பிரதாப் ,மோடிக்கு கோவில் கட்டிய பிறகாவது பெட்ரோல் விலை குறையும் ,பணவீக்கம் குறையும் மற்றும் மக்கள் தங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நகர மக்களிடம் நிலவியது .ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது கடவுளையே காணவில்லையே என்று கிண்டலடித்தார்.கோவில் கட்டிய அவரது தொண்டரே சிலையை அகற்றியது அந்த வட்டாரங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.