திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது!
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சரமாரியாக அறிக்கைகளை மக்களிடம் அள்ளி வீசினர்.மக்களே யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என யோசிக்கும் அளவிற்கும் குழப்பம் ஏற்பட்டது.ஆனால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றியடைந்தது.பத்தாண்டுகள் கழித்து திமுக இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்ர்தலில் வெற்றிவாகையை சூடியது.தற்போது ஆட்சி அமர்த்திய முதல் திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறிய முதலே 5 நலத்திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து திட்டம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திமுக பத்தாண்டுகாலமாக ஆட்சி அமைக்காததால் அந்த 10 ஆண்டுகளில் பல வழிகளில் திமுகவை அதிமுக பழி வாங்கி உள்ளது.அதில் அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது பாலம் கட்டுவதில் முறைக்கேடுகள் நடந்துள்ளதாக மறைந்த முதல்வர் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்களை விசாரணை செய்தனர்.
அதனையெல்லாம் திமுக நினைவில் வைத்துக்கொண்டு தற்போது நடந்த முடிந்த ஆட்சியில் அதிமுக செய்த தவறுகளை நேரடியாக கூறி தண்டனை வாங்கி கொடுத்து வருகிறது.அந்தவகையில் சென்ற ஆ௫த்சியில் குடிசை மாற்று வாரிய சார்பாக 2 குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது.அது தற்போது தொட்டாலே விழும் சூழலில் உள்ளது.அதனை தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆய்வு மேற்கொண்டு தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அதை பற்றி கூறியுள்ளார்.
இவர் கூறியதையடுத்து அவ்வாறு கட்டப்பட்டவர்கள் பின்னணியில் யார் உள்ளார்கள் என ஆய்வு நடந்து வருகிறது.அதில் தற்போது 2 பொறியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.நடந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்ச ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து தற்போது மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
தற்பொழுது கையிருப்பில் இருக்கின்ற நிலக்கரிக்கும் , தற்பொழுது பதிவேட்டில் உள்ளதாக கூறிய நிலக்கரிக்கும் 2.38 டன் வித்தியாசமாக உள்ளது.அப்பொழுது 2.38 டன் நிலக்கரியை காணவில்லை என்று கூறியுள்ளார்.இதற்கு முன்னாள் அதிமுக ஆட்சி என்னதான் நிர்வாகம் செய்தது எனபது போலவும் கூறினார்.மற்ற அமைச்சர்களை போலவே இவரும் இவ்வளவு நிலக்கரி காணமல் போனதற்கு கண்டிப்பாக இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்படுவார் என கூறியுள்ளார்.கடந்த ஆட்சியில் மின்துறை அமைச்சராக தங்கமணி இருந்தார்.திமுகவின் அடுத்த டார்கெட் முன்னாள் அமைச்சர் தங்கமணி தான் என கூறுகின்றனர்.தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.