சூரரைப் போற்றுத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

சூரரைப் போற்றுத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று.இந்த திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது.சுதா கோங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்தார்.

இந்த திரைப்படம் பெருமளவில் வெற்றிபெற்றது.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகின.ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்தார்.பிரபல விமான நிறுவனத்தின் முதலாளியான ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது.அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இந்த திரைப்படம் திருப்திப்படுத்தியது.

மேலும் அமேசான் ஓடிடி தளத்தில் நிறைய பார்வையாளர்களை பெற்றது இந்தத் திரைப்படம்.இதனிடையே இந்தத் திரைப்படம் மெல்போர்னில் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.திரையிடப்பட்ட படங்களுள் சிறந்த திரைப்படமாக சூரரைப் போற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.காணொளி மூலமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.மேலும் சிறந்த நடிகருக்கான விருதும் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.

ஒரே திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.மேலும் இது குறித்து நடிகர் சூர்யா பேசுகையில் சூரரை போற்று திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் விருது இது எனவும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது செர்னி திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை வித்யா பாலனுக்கு கிடைத்தது.இந்த விழாவில் சமீபத்தில் திரைக்கு வந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment