இந்த சம்பவம் அமெரிக்காவில் தான் நடைபெற்றுள்ளது. மிகவும் நண்பகல் நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த 60 வயதான ஜெசி என்பவருக்கு உடல் நலம் குன்றி வலிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர் சுயநினைவை இழந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
https://www.instagram.com/p/CSwdT_8lREF/?utm_source=ig_web_copy_link
ரயில் வருவதற்கு சில மணி நிமிடங்கள் இருக்கும் நிலையில் தங்கள் உயிரை பணயம் வைத்த அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஒரு ஸ்டேஷனில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த ஒரு 60 வயது முதியவரை போலீஸ் அதிகாரியும், மேலும் அங்கு உள்ள ஒரு மனிதரும் சேர்ந்து காப்பாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவர்கள் காப்பாற்றிய வீடியோவை நியூயார்க் நகர காவல்துறை பகிர்ந்துள்ளது. பிரான்சில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் ஒருவர் நேருக்கு நேர் கீழே படுத்து இருப்பது போல தெரிகிறது. அங்கு நின்ற ஒரு அதிகாரி ரயில் நிலையத்திற்குள் நுழையும் பொழுது, அந்த நபரை பார்த்த அவர் அவரை காப்பாற்ற கீழே தண்டவாளத்தில் குதித்து அவருக்கு உதவி செய்ய மற்றொரு பயணியும் குதித்துள்ளார்.
இதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு போலீஸ் அமலாக்கத்துறை, போலீசார் நியூயார்க்கில் உள்ள மக்களுக்கும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்யும் நிலையில் உள்ளனர் என்று அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிரும் பொழுது குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த மனிதன் சுய நினைவை இழந்து தண்டவாளத்தில் விழுந்தார் என்றும் தைரியமாக உதவிய அந்த போலீஸ்காரருக்கு நன்றி மேலும் அந்த மற்றொரு மனிதருக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது.
60 வயதான அந்த நபரை காப்பாற்ற குறித்த அந்த அதிகாரி லுடீன் லோபஸ் கூறுகையில், சிபிஎஸ் இரண்டு ரயில் வந்து நிற்பதற்கு ஒரு நிமிடம் தான் உள்ளது என்று என்னிடம் ரயில் நிலைய அதிகாரி கூறினார். ரயில்வே தண்டவாளத்தில் இருந்து மனிதனை வெளியே இழுக்க முயன்றபொழுது ரயில் மூன்றாவது கட்டத்தை நெருங்கியது. ரயிலின் வெளிச்சம் பிரகாசமாக வருவதை என்னால் உணர முடிந்தது. என் உதவி தேவைப்படும் ஒருவரை நான் பார்த்த உடனே நான் யோசிக்கக்கூட இல்லை அவரை காப்பாற்ற உடனே தண்டவாளத்தில் குதித்து விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
NYPD வெளியிட்ட வீடியோ அந்த அதிகாரி மற்றும் உதவி செய்ய வந்த மனிதரையும் பார்த்த பலரும் வியப்பில் ஆழ்த்தும் படி அந்த வீடியோ இருந்துள்ளது. நெட்டிசன்கள் போலீசாருக்கும் அந்த மற்றொரு மனிதருக்கும் நன்றி தெரிவித்த பாராட்டி வருகின்றனர்.