திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் பெரிய கம்மியம்பட்டு ஏஜிஎம் மஹாலில் திமுக ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் உமா கண்தங்கம் தலைமையில் மேற்கு திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம் சார்பாக உள்ளாட்சி குறித்த பொது உறுப்பினர்களின் ஆலோசனை நடந்தது.இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டசபை உறுப்பினர் தேவராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகளை கொடுத்தார்கள்.
அதோடு இந்தக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் டிஎம் கதிரவன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ் ராஜா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சிந்துஜா, ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் குறைவான அளவில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை பார்த்த மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் சட்டசபை உறுப்பினர் கடும் கோபத்திற்கு ஆளானார். அதோடு ஒன்றிய பொறுப்பாளர் இந்த கூட்டத்தில் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு நிர்வாகிகளை வைத்துக்கொண்டு இந்த கூட்டத்தை ஆரம்பித்தீர்கள், கூட்டத்தை எவ்வாறு நடத்துவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் போது அதனை வெற்றி கொள்வது எவ்வாறு என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இதன் காரணமாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது இதன் காரணமாக, ஆலோசனை கூட்டம் பாதியிலேயே நுழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் சட்டசபை உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.