வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

0
131
Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!
Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.குறிப்பாக திமுக ஆட்சி அமர்த்திய பிறகு ஒரு மாத காலத்துக்குள்ளேயே கொரோனவின் இரண்டாவது அலை அதிக அளவு தீவிரமடைந்தது.அப்பொழுது மக்கள் மருத்துவமனைகள் இன்றியும்,தடுப்பூசிகள் இன்றியும், ஆக்சிஜன் இன்றியும், பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். மூன்றாவது அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதனை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடச் சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர் களும் அவரவர் மாவட்டங்களில் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடி வருகின்றனர். அதனையடுத்து தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அடுத்தடுத்து செய்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது மக்களை தேடி வரும் தடுப்பூசி என்பதை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்பொழுது சென்னையில் அதிகப்படியான கொரோனா தொற்று பரவல் அதிகளவு ஏற்பட்டு வருவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்துவது சந்தேகத்திற்குரியது. அதனால் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவரவர் இடங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மழை தற்பொழுது அதிக அளவு பெய்து வருவதால் மழை நீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தற்போது நடப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்துவதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கூறியுள்ளனர். மேலும் அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவும் அதிக அளவு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.மேலும் 0442 538 4520, 46 122300 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தற்பொழுது சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கும் மேற்பட்ட விருப்பு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவிவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!
Next articleடிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!