தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக!
தமிழக சட்டப்பேரவை கூட்டமானது கடந்த 13ஆம் தேதி தொடங்கப்பட்டது தற்பொழுது சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பட்ஜெட் தாக்குதல் புதிதாகக் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் தமிழ்நாட்டில் பல புதிய பட்ஜெடான இ பட்ஜெட் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது.அதை கொண்டு வந்ததன் மூலம் பெட்ரோல் விலை ரூ 3 ரூபாய் முதல் குறைந்து காணப்பட்டது.அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவி குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.13-ஆம் தேதி தொடர்ந்து 14 ஆம் தேதி முதல்முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வேளாண் பட்ஜெட் தாக்கல் மூலம் விவசாயிகள் பலர் நன்மை அடைந்துள்ளனர்.
அந்த வகையில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரித்துள்ளனர். மாடி தோட்டம் செய்பவர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என கூறினர். மேலும் குறு பற்றி சாகுபடிகள் நியாயவிலை கடைகளில் விற்க அனுமதி அளித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் உடைய ஆலோசனை 16ஆம் தேதி தொடங்கியது.இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பலர் கேள்வி கேட்டனர்.அதற்கு வேளாண்துறை அமைச்சர் பதிலளித்தார்.மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.திமுக ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை மேலும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற மர்மங்களை வெளிக்கொண்டு வருவோம் என்று கூறினர்.
அதேபோல 11 தேதியை அடுத்து பதினெட்டாம் தேதி இதுபற்றிய விவாதம் நடக்க தொடங்கியது. இதுபற்றி பேசத் தொடங்கியதும் அதிமுக தலைமை சற்று ஆட்டம் கண்டது போல் ஆனது. 18ஆம் தேதி தொடர்ந்து சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது.இந்த மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.இந்தக் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இன்று முதலில் மானிய கோரிக்கை மற்றும் வாக்கெடுப்பும் நடப்பதாக கூறுகின்றனர்.மேலும் நீர்வளத் துறை சம்பந்தப்பட்ட மானிய கோரிக்கை ஆலோசனை நடக்க உள்ளதாக கூறுகின்றனர்.முன்பை போலவே எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்களும் மற்றும் முதல்வரும் பதில் அளிக்க உள்ளார்.
இந்த விவாதம் நிறைவடைந்த பிறகு நீர்வளத்துறை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும். சட்டமன்றப் பேரவை ஆரம்பித்து இரு நாட்களாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிமுக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தே இருந்தனர். அதனையடுத்து சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்ற இருப்பதாக எழுந்த புகாராலும் மேலும் அனல் மின் நிலையத்தில் 2.8 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனது குறித்து திமுக ஆய்வில் வெளிவந்ததும். இதனால் ஆர்த்தி முகம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது.இதற்கான சரியான பதில்கள் ஏதும் அதிமுக கொடுக்கவில்லை.
இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு பங்குபெறுமாயின் காரசாரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனக் கூறுகின்றனர்.குடிசை மாற்று வாரியம் பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டி தருவதை கவனித்து வந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு தரமற்ற வீடு கட்டியதால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தற்பொழுது எதிர்க் கட்சியில் நடந்த ஊழல்களை ஆளும் கட்சி வெளிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் அதிமுக கதிகலங்கி நிற்கிறது.அதேபோல அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற ஊழல்கள் பற்றி ஒரு பேரவையில் உறுப்பினர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.