டிவிட்டரில் சாதனை படைத்த வலிமை! இதுதான் காரணமா?
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தலங்களில் ட்விட்டரும் ஒன்று.இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது.இன்று 14வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.பிரபலங்கள் அனைவரும் ட்விட்டர் தளத்தில் தங்கள் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.இதற்காக பொதுமக்கள் பலரும் அவர்களை டிவிட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த நபர்கள் டிவிட்டரில் தங்கள் கணக்கின் மூலமாக பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் அனைவரையும் பல்வேறு மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.இவர்கள் புதிய செய்திகளை ஹேஷ்டக் மூலம் தெரிவிப்பார்கள்.அதனால் அந்த ஹேஷ்டேக்கானது டிவிட்டரில் மிகவும் பிரபலம் ஆகும்.இன்று ட்விட்டர் நிறுவனம் ஹேஷ்டேக் தினத்தைக் கொண்டாடுகிறது.
மேலும் ட்விட்டர் இந்தியா நிறுவனமானது தங்கள் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 30 வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் வலிமை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.நடிகர் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் வலிமை ஆகும்.இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் இதுவே.
வலிமை திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் இந்த படத்தின் செய்திகளுக்காக பல்வேறு இடங்களிலும் பல நபர்களிடமும் இதனை விவாதித்து வந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வையான மோஷன் போஸ்டர் வெளிவந்தது.அதன் பின்னர் அந்த படத்தில் ஒரு பாடலும் வெளிவந்தது.இதனால் அந்த படத்தின் தலைப்பான வலிமை அதிகம் பகிரப்பட்டது.
மேலும் இரண்டாவது இடத்தை நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் பிடித்துள்ளது.மூன்றாவது இடத்தை சர்க்காரு வரி பாட்டாவும் நான்காவது இடத்தை அஜித்குமார் மற்றும் ஐந்தாவது இடத்தை தளபதி 65 பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.