தியேட்டர்கள் திறந்தாலும் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள்? ஏன் தெரியுமா?
தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் பல திரையரங்கங்கள் சரியாக திறக்கப்படவில்லை.சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களை மீண்டும் திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே திரையரங்கம் செயல்படும் அல்லது இதற்க்கு முன்பு வெளியான திரைப்படங்களை மறுவெளியீடு செய்தால் மக்கள் படம் பார்க்க திரையரங்கிற்கு வருவார்கள்.
இதனிடையே கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.மேலும் பல திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் திரையரங்கம் திறப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தனர்.இந்நிலையில் ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்களும் ஏராளமாக உள்ளன.நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படம் செப்டம்பர் 10 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் செப்டம்பர் 10 அன்று சன் டிவியில் நேரடியாக வெளியாக இருக்கிறது.தொலைக்கட்சியில் வெளியானபின் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.மேலும் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.சோனி லிவ் தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வந்தன.ஆனால் அதனை படக்குழு மறுத்துள்ளது.திரையரங்கில் வெளியிடவும் இன்னும் திட்டமிடவில்லை எனவும் டாக்டர் படக்குழு தெரிவித்துள்ளது.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.இதனால் திரையரங்கம் திறந்தாலும் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாவது தொடரும் என்றே தெரிகிறது.