ஊட்ட சத்து குறைவினால் பலியான 73 குழந்தைகள்! மாநில அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மேலும் சில குழந்தைகள் உயிர் இழந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக மராட்டியத்தில் மராட்டியத்தில் மெல்காட் மண்டலத்தில் அதிக அளவு குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த 2007ஆம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அந்த பகுதியில் உள்ள பொது சுகாதார மையங்களில், குழந்தைகள் நல மருத்துவர்கள், ஆய்வகப் பணியாளர்கள், போதிய அளவில் இல்லாமல் இருப்பது போன்றவையும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன.
தற்போது இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி, நீதிபதி திபான்கர் தத்தா ஆகியோர் அமர்வு முன்பு நடந்தது. இதில் நேற்று நடந்த விசாரணையின் போது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மெல்காட் மண்டலத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக எழுபத்தி மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாகவும், அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
அதற்கு நீதிபதிகள் அரசு எந்திரங்கள் எல்லா வசதிகளுடனும் இருந்தாலும், எப்படி ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக உயிர் இழக்க முடியும்? இது மிகவும் தீவிரமான பிரச்சினையை மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு ஜூலை வரை, ஊட்டச் சத்துக் குறைபாட்டின் காரணமாக, உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அந்தப் பகுதிகளுக்கு, அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவர்களின் விவரங்களை அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து நடைபெறும் விசாரணையின் போது ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக அல்லாமல் கூடுதலாக குழந்தைகள் உயிரிழந்தது இருந்தால் அதற்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்கள் தான் பொறுப்பு எனக் கருதுவோம். செப்டம்பர் 6ஆம் தேதி அடுத்த விசாரணை நடத்தப்படும். அப்போது கூடுதலாக உயிரிழப்புகள் நடந்ததாக, நாங்கள் கேள்விப்பட்டால் கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் கூறினார். இதேபோல ஊட்டச்சத்து பற்றாக்குறைக்காக மாநில அரசு ஒதுக்கிய நிதி குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.