மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழப்பு… குடியாத்தம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

  மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழப்பு… குடியாத்தம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…   குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வேலூர் மாவட்டம் எல்லையில் ஆந்திர வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் இருக்கின்றது. கவுண்டன்யா சரணாலயத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றது. கவுண்டன்யா சரணாலயத்தில் உள்ள யானைகள் பல குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more

நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!

  நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு…   நெல்லை மாவட்டத்தில் மாமனாரை மருமகன் வெட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.   நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே முதலியார் பட்டி உள்ளது. முதலியார் பட்டியில் உள்ள நடுத்தெரு என்ற பகுதயை சேர்ந்த முத்துக்குட்டி தனது மகளை அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ஆதிலெட்சுமணன் என்பவருக்கு … Read more

தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு! ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்களின் தவறான சிகிச்சையால் வலது கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜீஷா தம்பதிக்கு முகமது மகிர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் குழந்தை 32 வாரத்திலேயே பிறந்ததால் உடலில் பல்வேறு பிரச்சனைகளுடன் அவதிப்பட்டு வந்துள்ளது.மேலும் மூளைக்கு அருகேயுள்ள வென்ட்ரிகுலா் அறையில் திரவம் கோர்த்திருந்ததால் அதனை சரிசெய்ய ஷண்ட் என்ற உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த உபகரணம் அதன் … Read more

மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…

  மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…   திருவள்ளூர் மாவட்டத்தில் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை ஊராட்சியில் உள்ள விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தில் 65 வயதான செல்வம் மற்றும் இவரது மனைவி மணிமேகலை இருவரும் வசித்து வருகின்றனர்.   நான்கு மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை அவர்களின் மாமனார் அதாவது செல்வம் … Read more

உலகின் மிக வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் கோம்ஸ்… தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார்!!

  உலகின் மிக வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் கோம்ஸ்… தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார்… சோகத்தில் குடும்பத்தினர்…   பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஜோஸ் கோம்ஸ் என்பவர் தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.   உலகின் மிக வயதான மனிதராக வசித்து வந்த ஜோஸ் கோம்ஸ் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். 127 வயதான ஜோஸ் கோம்ஸ் அவர்கள் 1917ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் … Read more

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதியதில் இரண்டு அரசு உழியர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 44 வயதான முகிலன் என்பவரும் 45 வயதான பாரதி என்பவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.   … Read more

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்!!

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்! தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் 24 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் தந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவை சேர்ந்த படங்கடி பொய்குடே பகுதியை சேர்ந்த தம்பதி ஆதம் மற்றும் ஹவ்வம்மா ஆவார்கள். இவர்களின் மகள் சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீர்ங்கனை ஆவர். தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்களுக்கு … Read more

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!!

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!! திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் தலையில் காயத்துடன் உயிரிழப்பு கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று  அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு … Read more

அதிக வேலை பளு!! அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம்!!

நாகர்கோயில் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம் போக்குவரத்து கழகம் நிர்வாகத்தால் அதிக வேலைப்பளு திணிப்பே மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கன்னியாகுமரி பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வந்தவர் இலங்கா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ப சேகரன். இவர் நேற்று நாகர்கோயில் பனிமனையில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது … Read more