மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்! ஆனாலும் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

Photo of author

By Hasini

மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்! ஆனாலும் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றினர். 20 வருடங்கள் கழித்து அவர்கள் கைப்பற்றினாலும், அதன் பின்பு உலக மக்கள் அனைவருக்கும், அங்கு இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் தன் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமான வசதியை ஏற்படுத்தி தன் நாட்டு மக்களை பாதுகாப்பாக வெளியேறி வருகின்றன.

அதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. மேலும் அங்கு நிதி நிலைமை மோசமாக இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் கைகளில் பணம் இல்லாமல் மிகுந்த இன்னல்களை சந்தித்த நேர்ந்தது. தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த வங்கிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியாக தங்கள் சேமிப்பு கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்கும் நோக்கத்தோடு வங்கிக்கு வந்தனர்.

ஆனால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வங்கியின் முன் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதன் காரணமாக வங்கியின் முன்பு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனாலும் வங்கியில் போதிய பணம் இல்லாததால், பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். விமான நிலையத்தில் இருக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரோ, பாலோ கூட வாங்க பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி, அமெரிக்காவின் மத்திய வங்கியில் சேமித்து வைத்துள்ள 7 பில்லியன் டாலர் மற்றும் தங்க நகைகளை அமெரிக்க அரசு முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இந்த வாரம் ஒதுக்கப்பட வேண்டிய 460 மில்லியன் டாலர்கள் பணத்தை சர்வதேச நீதி மையமும் நிறுத்தி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.