வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !

0
78
Check all this out when buying a new vehicle! Be careful about this too! High Court issues order!
Check all this out when buying a new vehicle! Be careful about this too! High Court issues order!

வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !

தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது மக்கள் இதையெல்லாம் பார்த்து கவனமாக இருங்கள் என்றும், போக்குவரத்து துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒரு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது நடந்த  விபத்தில் சடையப்பன் என்பவர் மரணமடைந்தார் எனவே அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இதை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வாகனத்திற்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுநர் அல்லாத ஒருவர் இழப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனவும் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப் பட்டது.

சடையப்பன் என்ற நபர் வாகன ஓட்டுநராக அடையாளம் காட்டப்பட்டு இருந்தாலும் விபத்து நடந்த போது அவர் வாகனத்தை இயக்கவில்லை என்றும், மேலும் அவர் சம்பளம் பெற்ற தற்கான ஆதாரங்கள் கூட இல்லை என்றும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன் ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம் புதிய வாகனங்களை வாங்கும் போது, அது எவ்வாறு செயல்படும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் மக்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை எனவும், விற்பனையாளர்களும் காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாக அவர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்தார். அதை தொடர்ந்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிதாக விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை மக்கள் கட்டாயமாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.