தமிழக அரசியல் களத்தில் தற்சமயம் பிஜேபியின் கேடி ராகவன் தொடர்பான வீடியோ தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்களும்,நிர்வாகிகளும், அந்த கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக தற்போதைய மத்திய இணை அமைச்சர் முருகன் தலைவராக இருந்த சமயத்திலேயே குற்றச்சாட்டுகள் இருந்தது. தற்சமயம் ராகவன் வீடியோ கால் விவகாரத்தில் இது உறுதியாகியிருக்கிறது கேடி ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் மிகவும் ஆபாசமாக பேசுவது போலவும் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அருவருக்கத்தக்க செயலை மேற்கொண்டது போலவும், வீடியோவில் காட்சிகள் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ராகவன் மட்டுமல்லாமல் அந்த கட்சியை சார்ந்த இன்னமும் பதினைந்து நிர்வாகிகளின் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் வீடியோவில் பதிவு செய்திருந்தார் மதன் ரவிச்சந்திரன். அதிலும் குறிப்பாக அண்ணாமலையிடம் இந்த வீடியோவை காண்பித்ததாகவும் அவர்தான் இணையத்தில் வெளியிட தெரிவித்ததாகவும், சொல்லியிருந்தார் அண்ணாமலை நேர்மையானவர் என்ற காரணத்தால், ராகவன் வீடியோவை வெளியிட சொன்னார் என்றும் அதன் தெரிவித்திருந்தார் வீடியோ வெளியாகி ராகவன் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல அண்ணாமலை தனக்கும், இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது போல ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்று சொல்லப்படுகிறது.
https://www.facebook.com/watch/?v=391856648951911
அந்த அறிக்கையில் இந்த வீடியோ குறித்து ரவிச்சந்திரன் மதன் என்னுடன் பேசியது உண்மைதான் எனவும், ஆனாலும் தான் அதனை வெளியிட சொல்லவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு மதன் ரவிச்சந்திரன் அவருடைய தோழி வெண்பா உள்ளிட்ட இருவருமே கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் .மதன் டைரி என்ற யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது. அவர் பொய் பேசியது போலவும் தான் நேர்மையானவர் என்ற அடிப்படையிலும் அறிக்கையை வெளியிட்ட அண்ணாமலையின் முகத்தை மதன் ரவிச்சந்திரன் தற்சமயம் தோலுரித்துக் காட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மகனுடைய யூடியூப் சேனலை முடக்கி இருந்தாலும் அவருடைய முகநூல் பக்கம் முடக்கப் படவில்லை. அதில் இன்றைய தினம் கேட்டு இராகவன் குறித்த அண்ணாமலை பேசிய ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மதன். அண்ணாமலை ஆடியோஸ் எக்ஸ் போஸ்ட் அண்ணாமலை ஆடியோக்கள் சிக்கும் போலி சிங்கம் பார்த்து பலன் அடையுங்கள் மக்களே என்று குறிப்பிட்டு மதன் அந்த வீடியோவில் பேசி வெளியீடு செய்திருக்கிறார்.அந்த வீடியோவின் இடையிடையே அண்ணாமலை பேசிய ஆடியோக்களையும் ஒளிபரப்பு செய்து இருக்கின்றார் மதன் அண்ணாமலையின் ஒவ்வொரு ஆடியோவை வைத்து பார்க்கும்போது இந்த வீடியோ காட்சியை அலுவலகத்திலிருந்து வீதிக்கு வரும்வரையில் முழு காரணமாக, இருந்தவர் அண்ணாமலை தான் என்று ஆதாரபூர்வமாக உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்சி ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க தனக்கு தைரியம் இல்லை என்றும் அதன் காரணமாக, நீங்கள் வீடியோவை வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியான நீதி கிடைக்கும் எனவும் ஒரு ஆடியோவில் அண்ணாமலை உரையாற்றி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கட்சிக்குள் பாலியல் அத்துமீறல் நடந்து கொண்டிருப்பதை அவர் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார் இருந்தாலும் அறிக்கையில் பாரம்பரியத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பாஜகவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் இருக்கின்ற பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப் படுகிறார்கள் என்று பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அந்த வீடியோவை மதன் தன்னிடம் காட்டவே இல்லை என்று தெரிவித்திருந்தார். இருந்தாலும் அண்ணாமலை இராகவனின் வீடியோவை பார்த்ததுபோல ஆடியோவில் உரையாடி இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல மதனுக்கு சட்டசபை உறுப்பினர் பதவி வாங்கி தருவதாகவும், வெண்பாவிற்கு கட்சிக்குள் நல்ல பொறுப்பை வாங்கித் தருவதாகவும் ,பேரம் பேசினார் அண்ணாமலை என்றும், சொல்லப்படுகிறது ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசியும் மதனையும் வெண்பாவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றார் அவர் ராகவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. திட்டம் போட்டு இருக்கிறார் இரண்டு மனநிலையில் முன்னுக்குப் பின் முரணாக பேசி மதனையும் வெண்பாவையும் திட்டம்போட்டு கட்சியில் இருந்து தூக்கி வீசி இருக்கிறார் அண்ணாமலை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே அதற்குள் நடந்த அதிகாரப் போட்டியின் காரணமாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகவே இதனை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமாகவும் இருக்கிறது.