பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஒரு தகவல் வெளிய வந்தது. அதாவது அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ தான் அது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ ஒன்றினை மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டார். இது மிகக் கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கியது இந்த சூழ்நிலையில், அந்த வீடியோவை சட்டப்படி சந்திப்பேன் என்று சொன்ன கேடி ராகவன் தன்னுடைய கட்சி பொறுப்பான பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கும் அதன் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டது. அந்த கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதோடு இந்த வீடியோவின் பின்னணியில் மாநில தலைவர் அண்ணாமலை இருப்பதாக சொல்லப்பட்ட சூழ்நிலையில், அண்ணாமலையும், மதன் தன்னை இரண்டு முறை நேரில் சந்தித்து பேசியதாகவும், அப்போது வீடியோவை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் அவர் மறுத்து விட்டார். அதோடு வீடியோவையும் வெளியிட்டு இருப்பதாகவும் அறிக்கையின் மூலமாக அண்ணாமலை விளக்கம் கொடுத்திருந்தார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அந்த கட்சி அளவில் ஒரு குழுவை அமைத்து அண்ணாமலை உத்தரவிட்டார்.
இருந்தாலும் மதன் வெளியிட்ட அந்த காணொளியில் இடம்பெற்று இருந்த அவருடைய அறிக்கைக்கு முரணாக இருந்தது. அவருடைய இந்த விளக்கம். அதன்பிறகு பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதன் ரவிச்சந்திரன் அவர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் அண்ணாமலை அதோடு அவருடைய யூடியூப் சேனல் முடக்கப்பட்டது.
இதனை அடுத்து நேற்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி இருக்கின்றார். அதில் அண்ணாமலை இடம் வீடியோவை காட்டி விட்டு அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்திருந்தார் மதன். அண்ணாமலை சந்தித்த சமயத்தில் அவருடன் நடந்த உரையாடலை ஆதாரமாக மதன் வெளியிட்டிருக்கிறார்.
அண்ணாமலை இடம் நடைபெற்ற உரையாடல் என மதன் வெளியே தெரிகின்ற அந்த காணொளியில் வரும் குரல் பதிவு முக்கியமான அவர்களிடம் வீடியோவை காட்டி மிக மோசமான நபர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை எல்லோருக்கும் புரிய வைப்போம். நாடு, கட்சி, தனிநபர்கள், போன்றவற்றை காப்பாற்றுவதற்கு இதனை நாம் செய்ய வேண்டும். கட்சியை கூட விடுங்கள் ஆனால் நாடு மிக முக்கியம் இந்த காணொளிகளை வைத்து பரபரப்பை உண்டாக்கினால் உங்களுடைய பிராண்ட் நிலைக்கும் இதனால் உங்களுக்கு எதிரிகள் உருவாக தொடங்குவார்கள். ஆகவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் மட்டுமல்லாமல் நேரில் உரையாடும் போதும் வீடியோவை காட்டுங்கள் எனவும், கட்சியை சார்ந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், அண்ணாமலை சொல்லியதாக மதன் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கின்றார். அதோடு அந்த வீடியோவை வைத்து அண்ணாமலை அவரிடம் பேரம் பேசியதாகவும், மதன் கூறியிருக்கின்றார்.
மதன் வெளியிட்டுள்ள இந்த காணொளியின் காரணமாக, தற்சமயம் அண்ணாமலைக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவர் செயல்படுகிறார் என்றும், கட்சிக்கு களங்கம் ஏற்படும் என்று தெரிந்துதான் அந்த வீடியோவை அவர் வெளியிட தெரிவித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏன் மதன் வெளியிட்டு இருக்கின்ற இன்றைய காணொளியில் கட்சியை கூட விடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, இந்த காணொளியை வைத்து போட்ட திட்டம் யாருக்கு என்று தெரியாமல் எல்லோரும் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் அண்ணாமலை மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தால் அந்த இடத்திற்கு குஷ்பு வருவதற்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.