ஆபத்து இல்லாத லாபம் தரக்கூடிய ஐந்து அம்ச அரசு திட்டங்களில் இணைவது எப்படி? விவரம் இதோ!

0
171

இந்திய நாட்டவர் இடையே சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி இருக்கின்றது. அந்த விதத்தில் இன்று நாம் பார்க்க இருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் ,தேசிய சேமிப்பு பத்திரங்கள் பற்றி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.இந்தத் திட்டங்கள் சந்தை அபாயம் இல்லாத ஒரு நிலையான வருமானம் கொடுக்ககூடிய பாதுகாப்பு திட்டங்கள் என்று சொல்லப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இந்த திட்டங்கள் உடைய முதலீடு உள்ளிட்டவற்றில் இறங்கும்போது முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வரிச்சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டங்களில் மாற்ற திட்டங்களை விடவும் வட்டி விகிதம் குறைவு தான் என்றாலும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது.இப்பொழுது நாம் முதலில் பார்க்கவிருப்பது சுகன்யா சம்ரிதி திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெற்றோர்களுக்கு தங்களுடைய பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்காக பாதுகாக்க ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மைனர் குழந்தைகள் அல்லது அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு குழந்தையின் பிறப்பு முதல் பத்து வயது வரையில் எந்த சமயத்திலும் இந்த எஸ் எஸ் ஒய் கணக்கை தொடங்கி கொள்ள இயலும்.

இதன் முடிவு காலம் 21 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்படுகிறது தற்போதைய நிலவரப்படி இதற்கான வட்டி விகிதம் 7.6% என்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையும் திருத்திக்கொள்ளலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்த ஒரு தொகையையும் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மற்றும் வட்டித் தொகைக்கு விலக்கு வழங்கப்படுகிறது. அரசின் இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் 18 வயதை அடைந்த பின்னரே முன்கூட்டியே கணிசமான தொகையை திரும்பப் பெற இயலும் ஒருவேளை உங்களுடைய சுகன்யா சம்ரிதி கணக்கை இதற்கிடையில் தொடராமல் விட்டால் பதினைந்து ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ள இயலும்.

மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு ஆன சேமிப்பு திட்டம் அரசின் திட்டம் என்ற காரணத்தால், மிக பாதுகாப்பானதாக இருக்கிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த சேமிப்பு திட்டமாக இது பார்க்கப்படுகிறது என்று சேமிப்பு திட்டத்தை ஓய்வு ஊதியம் சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு தொடங்க வேண்டும். என்ற நிபந்தனை இருக்கிறது.இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கு ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது இல்லை என்றால் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கு பகுதி உடையவர்கள்தான்.

அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆனாலும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற சமயத்தில் தரப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக்கூடாது இந்த சேமிப்பு திட்டத்திற்கு தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் வட்டி 7.4 சதவீதமாக இருந்தது. இந்த திட்டத்தில் உங்களுடைய முதலீடு 9 வருடங்களில் இரட்டிப்பு ஆகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முடிவு காலம் 15 வருடம் ஆனாலும் அதன் முடிவு காலத்திற்குப் பின்னரும் ஐந்து வருடங்கள் தொகுப்பாக தொடர்ந்து இருக்கலாம். இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம் தற்சமயம் இந்த திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டு தொகை பத்து வருடங்களில் இரட்டிப்பாக்கி தரப்படுகிறது.

இந்திய தபால் துறையின் இருக்கின்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான சேமிப்புத் திட்டம் தான் கேவிபி என்ற கிசான் விகாஸ் பத்திரம் இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் 6.9 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக சேமிக்க விருப்பமுடையவர்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம் அதிகபட்ச முதலீடு என்று எந்த இலக்கும் இதுவரையில் நிர்ணயம் செய்யப்படவில்லை.

நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்கள் கழித்து இரட்டிப்பு ஆகிறது. அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு 18 வயதில் முடிந்திருந்த எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர் தான் என தெரிவிக்கப்படுகிறது இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு வாங்கி தனக்கு தேவையில்லை ஒரு குழந்தை அல்லது அவர்களுடன் நின்று முதலீடு செய்யலாம். இந்த பத்திரத்தை அறக்கட்டளைகள் கூட வாங்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தங்களுடைய பங்களிப்பு மற்றும் லாபம் என்று இரண்டிற்கும் மற்ற திட்டங்களை போல வருமான வரி விலக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனாலும் முதிர்வு காலத்திற்கு பின்னர் எடுக்கும்போது டிடிஎஸ் விளக்கு வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம் நாட்டில் இருக்கின்ற அனைத்து அஞ்சலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இருக்கிறது. இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டம் தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே சமயத்தில் ரிஸ்க் குறைவான திட்டமாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு எதுவும் இல்லாமலும் இருக்கிறது.

தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர் அதற்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகையாக பெறலாம். தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.8 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று சொன்னால் 5 வருடம் கழித்து உங்களுடைய முதலீடு 1389.49 ரூபாய் ஆக அதிகரிக்கும் இந்தத் திட்டத்தில் பத்து வருடங்களில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாக்கி கொடுக்கப்படும்.

Previous article20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்!
Next articleHome Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?