கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் தற்போது வெளியேறி விட்டன. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தலிபான் பிரதிநிதியை இந்திய தூதர் தீபக் மெட்டல் இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான இந்திய தூதர் தீபக் மீட்டல், தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர் அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் சந்தித்துப் பேசினார்கள். தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும், பயங்கரவாத செயல்களையும் எந்த வகையிலும் நடைபெறக் கூடாது என இந்திய தூதர் குறிப்பிட்டதாகவும். இந்த விவரங்களுக்கு நேர்மையான முறையில் தீர்வு காணப்படும் என்றும் தலிபான் பிரதிநிதி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.