அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு

0
136

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வெளிவந்துள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில் ராமர் பிறந்த மண் அயோத்தி என இந்துக்கள் நம்புகின்றனர் என்றும், இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது என்றும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புவது காலம் காலமாக தொடர்ந்து வருகின்றது என்றும், எனவே அயோத்தி இந்துக்களுக்கே சொந்தமானது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இருப்பினும் அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கே வழங்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதிக்கப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Previous articleகாலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்
Next articleமக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன்