கேடி ராகவன் வீடியோ வெளியான ஒரு சில தினங்களிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்த சூழ்நிலையில், பல காரணங்களை தெரிவித்து அதனை தவிர்த்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தற்போது திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கிறார்.
யாருக்கும் தெரியாமல் முடிந்திருக்க வேண்டிய அந்த வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முதல் காரணம் அண்ணாமலை தான் என்பது போன்ற தகவல்கள் பாஜகவின் தேசிய தலைமையை கடுமையான அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் தலைவர் பதவிக்கு அண்ணாமலை அன் பிட் என்ற விதத்தில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு அவசரமாக கடிதம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுதி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு சில காலத்தில் செல்வாக்கு இருந்த முன்னணியினர் ஒரு சிலரும் கூட அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தலைமைக்கு கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.
தலைவர் பதவிக்கான குணாதிசியங்கள் ஆன பொறுமை கொஞ்சம் கூட அண்ணாமலை இடம் இல்லை தற்போதும் அவர் ஒரு காவல்துறை அதிகாரி போல தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை தலைவர் பதவியில் வைத்திருப்பது ஆபத்து என்ற விதத்தில் அந்த கடிதங்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல வீடியோ வெளியான பின்னர் சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு இருந்து வந்த ஆதரவை முற்றிலுமாக குறைந்து போய்விட்டது. இதற்கு காரணம் அவருடைய முதிர்ச்சியற்ற செயல்பாடுகள் தான் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை என தெரிவிக்கிறார்கள்.
ராகவன் வீடியோ விவகாரத்திற்கு பின்னர் கட்சியின் சார்பாக நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்று கொள்ளாமல் அண்ணாமலை தவிர்த்து வருகின்றார். இறுதியாக மூப்பனார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பினார். இதற்கிடையில் ராகவன் வீடியோ விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு கடந்த சில தினங்களாகவே டெல்லி மேலிடம் அண்ணாமலையை அழைத்து வருகின்றது. இருந்தாலும் அதற்குள் மதனிடம் இருக்கின்ற வேறு வீடியோக்களில் இருக்கின்ற பெண்களை தொடர்பு கொண்டு அந்த வீடியோவில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த கூடிய வேலையில் அண்ணாமலை தீவிரமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் அண்ணாமலை அதாவது ராகவன் வீடியோ விவகாரத்தில் கைது செய்துவிட்டதாக அறிக்கையுடன் அவர் செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதேநேரம் அண்ணாமலையின் விளக்கத்தை பாஜக மேலிடம் ஏற்றுக் கொள்வது மிக மிக கடினம் என சொல்லப்படுகிறது. அண்ணாமலைக்கு இந்த பதவி கிடைக்க முழுக்க முழுக்க அமித்ஷா மட்டுமே காரணம் வேறு எந்தப் பக்கத்திலிருந்தும் அண்ணாமலைக்கு தற்சமயம் ஆதரவு இல்லை என்று சொல்கிறார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக அண்ணாமலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அமித்ஷா தொடர்ச்சியாக அண்ணாமலையை ஆதரிப்பார் என்பது சந்தேகம்தான் தெரிவிக்கிறார்கள். ஆகவே டெல்லியில் விசாரணை முடிவுற்று அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் அடிக்கடி தான் பாஜகவின் கடைக்கோடி தொண்டன் என்ற விதத்தில் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வந்ததாக சொல்கிறார்கள். அதேநேரம் பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மூலமாகவே தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான தன்னுடைய வேலையை தொடங்கி இருக்கிறார் எனவும் தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் தற்சமயம் ரவி புதிதாக வீடு கட்டி இருக்கிறார் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு செல்வதாக தெரிவித்துவிட்டு அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். ஆகவே தமிழக பாஜகவின் தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா ? இருக்க மாட்டாரா என்ற கடைசி நிமிடங்கள் கமலாலயத்தை சுழற்றி அடித்துக் கொண்டு இருக்கிறது.