உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்!

0
209
Motorcycle around the world! Ajith, the head of the project!
Motorcycle around the world! Ajith, the head of the project!

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில் அவர் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் கார் சண்டைக் காட்சி ஒன்று மட்டும் படமாக்க வேண்டி இருந்தது.

அதன் காரணமாக அந்த காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் படக் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரமாண்டமான சண்டைக் காட்சி பத்து நாட்களில் படக்குழு தயாரித்தது. அதை முடித்துவிட்டு அனைவரும் இந்தியா திரும்பிய நிலையில் நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் திரும்ப வில்லை. அவர் ரஷ்யாவிலேயே தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ரஷ்யாவில் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் ரஷ்யா முழுவதும் 5 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் ரக மோட்டார் சைக்கிளுடன் அவர் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் சிக்கிம் வரை சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. இந்த எதிர்பாராத மோட்டார் சைக்கிள் பயணங்கள் அவரது பயணத்தின் மீதான ஆர்வத்தைக் காட்டுகின்றன. வெவ்வேறான நிலப்பரப்புகள் மற்றும் வானிலை நிலைமைகள் உடன் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள அவர் தனது மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பற்றி அவர் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், சமீபத்தில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிக்கையின் மூலம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

Previous articleஎதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!
Next articleமக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!