இந்தியா : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மூன்றாவது அலையின் தொடக்கமா?

0
123

தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளதால் மூன்றாம் அலை பாதிப்பு குறித்து முன்கள பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 ஆயிரத்து 092 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக அதிகரித்துள்ளது

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,529 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிப்புகள் தீவிரமடைந்து இரண்டாம் அலையைபோல் மூன்றாம் அலையும் உருவாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஉள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
Next articleஹீரோயின் ஆகும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி!