கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

0
206

டெஸ்ட் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது.

இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும்.

மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதேபோல், இர்பான் பதான் 28 போட்டியிலும், முகமது ஷமி 29 போட்டியிலும், ஜவகல் ஸ்ரீநாத் 30 போட்டியிலும், இஷாந்த் சர்மா 33 போட்டியிலும் 100 விக்கெட்கள் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் 18 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்து அஸ்வின் முதலிடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய அணி சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிகப்பெறும் பலமாக பும்ப்ரா திகழ்ந்து வருகிறார்.

Previous articleஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!
Next articleகியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here