தாலிபான் இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரானா முல்லா ஹசன் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் யார் என்பதை பலரும் கூகுள் வழியாக தேடிவருகின்றனர். இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுண்ட் ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் மாகாணத்தைச் சோ்ந்தவா். தலிபான்கள் இயக்கத்தைத் தொடங்கியவா்களில்
ஒருவரான அவர் தலிபான்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் (1996-2001) வெளியுறவு அமைச்சராகவும்,
துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
அதே போல் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா அப்துல் கனி பராதா், அமெரிக்காவுக்கும்
தலிபான்களுக்கும் இடையிலான தோஹா பேச்சுவாா்த்தையை முன்னின்று நடத்தியவா்.
தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவராக அறியப்படுகிறாா். பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா யாகூப், தலிபான் இயக்கத்தின் நிறுவனரான முல்லா ஒமரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு குறித்து அமெரிக்காவின் வெள்ளை
மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி செவ்வாய்க்கிழமை கூறுகையில், எந்த மாதிரியான
நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொள்கின்றனா் என்பதைப் பொருத்தே தலிபான்களின்
அரசுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்றாா். இதேபோன்ற கருத்தையே பிரிட்டன் மற்றும்
ஐரோப்பிய நாடுகளும் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.