மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
124

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், நோய் தொற்றுக்கு முன்னர் மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு வங்கிகள் 8.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கொடுத்தனர். நோய்தொற்று வருடங்களுக்குப் பின்னர் இந்த வட்டி தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, இந்த தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆகவே வட்டியை குறைத்து போட்ட உத்தரவை ரத்து செய்து நோய்த்தொற்றுக்கு முன்னர் வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்கிட உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி பிடி ஆதிகேசவலு, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் எந்தவிதமான வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள் இந்த வைப்புத் தொகையின் மூலமாக கிடைக்கும் வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது என கூறியிருக்கிறார்கள்.

அதேசமயம் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, மூத்த குடிமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரம் மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது மத்திய அரசின் கொள்கை முடிவு. ஆகவே இது குறித்த எந்த ஒரு உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இருந்தாலும் இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பி இருக்கும் மூத்த குடி மக்களின் நலனை யோசித்து வட்டி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பணத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

Previous articleசவாலுக்கு சவால்! சட்டசபையில் மா சுப்பிரமணியன் மாஸ் ஸ்பீச்!
Next articleகொரோனா 3வது அலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!