வரலாறு காணாத மழை : ஸ்தம்பித்தது தலைநகர் டெல்லி!

0
163

டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பெய்யும். ஆச்சரியப்படும் வகையில் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில், டெல்லியில் 24 மணிநேரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது. டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது. கடந்த 1975ம் ஆண்டுக்கு பின்பு (1155 மி.மீ.) டெல்லியில் கடந்த 4 மாதங்களில் 1139 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

டெல்லி விமான நிலையம் உள்பட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. பல தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது.

Previous articleதிருவள்ளூரில் விபரீதம் : விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு!
Next articleதமிழகம் : மாபெரும் தடுப்பூசி முகாம், 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை!