மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

0
141

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தும், சிவசேனா கட்சியின் பேராசையால் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது

சிவசேனா தனித்து ஆட்சி அமைக்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் தற்போது யாருக்கும் இன்றி அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்கள் எந்தக் கட்சியிடமும் இல்லை என்றாலும் பாஜக-சிவசேனா கூட்டணி அமைந்திருக்கலாம். ஆனால் சிவசேனாவின் பேராசை மற்றும் பிடிவாதம் இன்று குடியரசு தலைவர் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது

Previous articleமகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
Next articleபெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்