சுமார் 2 3 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், எப்போதும் பகையாக தான் இருந்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பிரதமர் நரேந்திரமோடி மறுக்கின்றார் என குற்றச்சாட்டை முன்வைத்தார் மம்தா பேனர்ஜி.
இந்த சூழ்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், எதிராக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க் கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் ஆற்றிய ஒரு உரை டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்வரும் 2024 ஆம் வருட நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைவராக மம்தா பானர்ஜி இருப்பார், அதேபோல மம்தா பானர்ஜி தான் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த தலைவராக இருக்க வேண்டுமென எங்களுடைய கட்சி விருப்பம் கொண்டிருக்கிறது. ராகுல்காந்தியை நான் நீண்ட காலமாக கவனித்து வருகின்றேன். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை தோல்வியுறச் செய்யும் திறனானது ராகுல்காந்திக்கு எப்போதும் இல்லை, இதை வைத்துக்கொண்டு காங்கிரஸ் அல்லாத கூட்டணி தொடர்பாக நான் பேசுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். ஒட்டுமொத்த நாடும் மம்தா பானர்ஜியை விரும்புகின்றது. எதிர்வரும் தேர்தலில் அவரே எதிர்க்கட்சிகளின் முகமாக தோன்றுவார் இதனை மையப்படுத்தி நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேர்தலில் ராகுல் காந்தியால் பிரதமர் நரேந்திர மோடியை நிறுத்த இயலாது. இடதுசாரிகளும் மதிப்பில்லாமல் போய் விட்டன என உரையாற்றுகிறார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியை எவ்வாறு எழுதலாம் என்று ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கட்சியும் திட்டம் போட்டு பார்த்தது. ஆனால் அந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடையச் செய்து மூன்றாவது முறையாக மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறார் மம்தா பானர்ஜி. இதன் காரணமாக, தேசிய அளவில் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த கருத்தை முன்வைத்து பேசியிருப்பது அரசியல் பேசுபொருளாக மாறி இருக்கிறது.