இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!
கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என்ற ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றனர். ஆனாலும் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று, மஞ்சள் பூஞ்சை தொற்று என பல்வேறு தொற்றுகள் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பலருக்கு ஏற்பட்டது. அதனால் பாதிக்கப் பட்டவருக்கு கண்கள் பாதிப்படைவதாகவும் மருத்துவர்கள் தகவல்கள் அளித்து வந்தனர்.
எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் போன்றோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டிப்பாக தாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அதன்படி கோவையில் மட்டும் மே மாதம் முதல் தற்போது வரை இந்த நோயால் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மண்டலத்தில் இதுவரை 496 பேர் கருப்பு பூனை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தற்போது 239 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் மீதம் உள்ள நபர்கள் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக, கருப்பு பூஞ்சையின் தாக்கம் சற்று தணிந்து உள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு உள்ளனர். எனவே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்கள் தங்களது உடலில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரை அளவை எப்போதும் சீராக பாதுகாக்கும் பட்சத்தில் இந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.