9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! வெளியானது திமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

0
133

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் போட்டியிட்டனர். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது அந்த தேர்தலின் போது புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது .அதாவது இந்த ஒன்பது விடுபட்ட மாவட்டங்களுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை செய்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கிடையில் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துவதற்கு அவகாசம் கேட்டது ,அதன்படி சென்ற 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதாவது இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கரூர் மற்றும் பழனியில் காலியாக இருக்கின்ற இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

நேற்றைய தினம் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுகவின் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா மோ அன்பரசன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Previous article14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! கொல்கத்தாவிடம் விழுந்த பெங்களூரு!
Next articleஇன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!