அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா பன்னீர்செல்வம்!
கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தை அதிமுக ஆட்சி நடைபெற்றது.தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டு பாத்தாண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றியது.திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என கூறியிருந்தது.கலைஞர் ஆட்சிக்கு பிறகு அவரது மகனான முக.ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்றார்.இவரது ஆட்சி தற்பொழுது சிறப்புமிக்கதாக உள்ளது என அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
திமுக கூறியது போல ஆட்சிக்கு வந்ததும் அதிமுக செய்த ஊழல்களை வெளி கொண்டு வருகிறது.அந்தவகையில் முதலில் அமைச்சர்கள் செய்த உழல் ஒன்றொன்றாக தற்போது வெளிக்கொண்டு வருகிறது.அந்தவகையில் முதலில் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.அவ்வாறு சோதனை மேற்கொண்டதில் பல கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் வியாஜய்பச்கர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.அதனையடுத்து கடந்த ஆட்சியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார் எழுந்தது.அந்த புகாரின் பேரில் அவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் கணக்கில் வராத பல ஆயிரக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.அதனையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் தற்போது சோதனை நடந்து முடிந்தது.அதில் கட்டுகட்டாக வெளிநாட்டு கரன்சிகளும்,கணக்கில் வராத சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.தற்போது அவர் நன்பர்கள் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த பட்டியலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரும் அடிப்பட்டது.அவர் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது,குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டி கொடுத்தது தர்மற்றாதாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.அந்தவகையில் புளியந்தோப்பு பகுதியில் மக்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் மீது புகார் எழுந்தது.அதனைப்போலவே தற்போது ஈரோட்டில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள் வெளியில் விரிசல் உளுந்துள்ளதாகவும் ,தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.கைகளை கொண்டு தொட்டாலே, உதிரும் நிலையில் உள்ளதாக தற்போது குடியேற இருக்கும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
அதனால் இந்த புகாரும் ஓ.பன்னீர்செல்வம் மீது திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோல புகார்கள் அவர் மீது எழும்போது அவர் வீட்டிலும் சோதனை நடத்தப்படும் என கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி பல அமைச்சர்கள் செய்த ஊழலே தற்போது வெளிவந்ததால் மக்கள் முன்னிலையில் பதிலளிக்க முடியாமல் அதிமுக தவித்து வருகிறது.இவற்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இம்மரியான புகார்களில் சிக்கினால் அதிமுக அதிகளவு ஆட்டம் கண்டுவிடும் என அரசியல் சுற்றுவட்டாரங்கள் கூறி வருகின்றனர்.