200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா?
200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 இரண்டாம் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக சின்னத்தை பணம் கொடுத்து வாங்க ரெடியாக இருந்த ஒரு நபர்தான் சுகேஷ் சந்திரசேகர்.
அந்த வழக்கில் பலர் சிறையில் இருந்து வெளியேறினாலும் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் அவரது பெங்களூரு வீட்டில் அவரது மனைவி லீனா பால் ஆகியோர் பற்றியும் ரேன்பக்சி நிறுவனர்கள் சிவீந்தர் சிங், மால்வீந்தர் சிங் ஆகியோரையும் ஏமாற்றி மிரட்டியும், 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள லீனா பாலன் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் 82.5 லட்ச ரூபாய் பணம் விலை உயர்ந்த கார்கள் ஆகிய பலவற்றை பறிமுதல் செய்தனர். அதன் விசாரணை கடந்த மாதம் நடைப்பெற்றது. அப்போது அந்த வீட்டில் பணம் மற்றும் இன்னும் பல பொருட்களும் போலீசார் விசாரணை மூலம் கைப்பற்றப்பட்டன.
அப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கைப்பேசிக்கு சுகேஷ் சந்திரசேகர் மூலம் அடிக்கடி தொடர்பில் இருந்தது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. அவர் ஒரு இலங்கை நடிகை ஆவார். அதன் காரணமாக பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதமே விசாரணை மேற்கொண்டனர்.
இன்று தற்போது இரண்டாம் கட்ட விசாரணையை மீண்டும் நடத்தியுள்ளனர். தற்போது இந்த நிலையில் இந்த இரண்டாம் கட்ட விசாரணையை சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் உண்மை நிலவரத்தை அவர்கள் வெளியே சொல்லாமல் வைத்துள்ளனர்.