கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி!
கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படமாட்டாது எனவும் கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக அதற்குரிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கேரள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் மாணவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.