இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு!

0
175
Order to remove roadside statues! High Court Next Action!
Order to remove roadside statues! High Court Next Action!

இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு!

அரசு துறைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை விரைவில் முடிக்க வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் கூறுகிறது.ஆனால் நம் மக்கள் இதனை காலகாலமாக செயல்படுத்தி இதனை ஓர் வழக்கமாகவே ஆக்கிவிட்டனர்.இவ்வாறு சென்ற ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை தற்போதுள்ள ஆளுங்கட்சி சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வருகிறது.

அரசு வேலை வாங்கித்தருவதாக தான் அதிகப்படியானோர் மோசடி செய்துள்ளனர்.அதனையடுத்து ரூ.1500 லஞ்சமாக வாங்கியதாக   போலீசார் பாஸ்கரன் என்பவரை  டிஜிபி அவர்கள் இடைநீக்கம் செய்து உத்தரவை பிறபித்தார். பாஸ்கரன் டிஜிபி போட்ட  இடைநீக்கத்தை எதிர்த்து, எனக்கு எதிராக எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,மேலும் இவர் சாதரண பணியில் பணி புரியலாம் என்று உத்தரவு ஒன்றை பிறபித்தார்.அதுமட்டுமின்றி இவர் மீது டிஜிபி போடப்பட்டிருந்த இடைநீக்கத்தையும் ரத்து செய்தார்.பாஸ்கரனுக்கு மீண்டும் பணி நியமனம் கொடுத்ததை எதிர்த்து டிஜிபி அவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.

அதில் நீதிபதிகள் கூறியதாவது,இடைநீக்கம் செய்த பிறகு பாஸ்கரன் மேல் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மீண்டும் அந்த காவல் அதிகாரியை பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறபித்த உத்தரவில் ஏதும் தலையிட முடியாது என கூறினர்.வழக்கின் முடிவில்  நீதிபதிகள் கூறியதாவது, ஊழலானது வேர் போல பரவி கரையான் போல சமுகத்தை செல்லரித்துள்ளது என்று கூறினார்கள்.லஞ்சம் வாங்குவது என்பது தற்பொழுது சாதரணமாகிவிட்டது.ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு எந்தவித பதவி உயர்வையும் வழங்க கூடாது என்று அதிரடியாக கூறினார்.

Previous articleஉணவு விநியோகிப்பாளர்கள் இதை பயன்படுத்த இனி தடை! எதிர்க்கும் மக்கள்!
Next articleபிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!