அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!`
குஜராத் மாநிலம் முந்தரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு மட்டுமே 21,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சொகுசு கப்பலில் நடந்த நட்சத்திர விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரின் மகன் உட்பட பலரை கைது செய்துள்ளனர்.
உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவே கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸார் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில், தற்போது இந்தி நடிகரின் மகன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அங்கே திடீரென வந்து பறிமுதல் செய்ததாகவும், செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் உண்மையான பிரச்சனையை திசை திருப்புகின்றனர். உண்மை பிரச்சனை முந்தரா துறைமுக போதைப் பொருள் ஆகும். அது தற்போது வெளிவந்து விடும் என்ற பயத்தில் தான் இந்த செய்தியை உருவாக்கியுள்ளனர்.
அந்த போதை பொருள்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பிரச்சனை தலைதூக்கி உள்ளதால் ஊடகத்தினர் அந்தப் பிரச்சினையை ஒளிபரப்ப மறந்து விடுவார்கள் என்ற காரணத்தினால், அங்கும் இங்கும் சிலரை போதைப்பொருள் பிரிவு இயக்க போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் நீங்கள் முந்தரா துறைமுகம் பற்றி எழுதுங்கள். அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும், அங்கு தான் அதிக அளவில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் நாட்டை காக்கும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் இது குறித்து மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.