கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் ஆரம்பித்திருக்கும் இந்த சூழ்நிலையில் 12 முதல் 18 வயது வரையில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அனுமதி கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் தான் அந்தத் திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் மேற்கொண்டார்கள் இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் வடகிழக்கு பருவமழை ஆரம்ப நிலையில், டெங்கு கொசு பாதிப்பு பரவலாகி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். அதோடு வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆலோசனை வழங்கி இருக்கின்ற சூழ்நிலையில், எல்லையோரங்களில் இருக்கின்ற மாவட்டங்களில் கொசு ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
லார்வா கொசுக்களை ஒழிப்பதற்காக கம்பூசியா மீன்கள் வளர்ப்பதற்கும், மருந்துகளை தெளிப்பதற்கும், உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், சென்னையில் 3581 களப்பணியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இருக்கின்றார். அதேபோல சென்னையில் 7 ஆயிரத்து 589 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கொசுக்களை அழிப்பதற்காக 14 ஆயிரத்து எண்ணூற்று முப்பது மருந்து அடிக்கும் இயந்திரம் தயாராக இருக்கிறது என்றும், அவர் கூறியிருக்கிறார். அதோடு இந்த வருடத்தின் 9 மாதங்களில் 83 ஆயிரத்து 409 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதிகமாக பரிசோதனை செய்ததால் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். அதனடிப்படையில் 2930 நபர்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தற்சமயம் 337 நபர்களுக்கு டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விளக்கம் அளித்தார் தற்சமயம் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் ஆரம்பித்து இருக்கின்ற சூழ்நிலையில் 12 வயது முதல் 18 வயது வரை இருப்பவர்கள் தடுப்பூசி சேர்த்துக்கொள்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறி இருக்கிறார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் தமிழ்நாட்டில் தான் அந்தத் திட்டம் முதன்முதலில் செயல்படுத்தப்படும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.