எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

0
195
The same rules for everyone to buy a house anymore! Supreme Court issues order!
The same rules for everyone to buy a house anymore! Supreme Court issues order!

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

குடியிருப்புகளை வாங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது பொதுநல வழக்காக கருதப்பட்டது. கட்டுமான நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்க படுவதில்லை என்று அந்த மனுவின் மூலம் குற்றம் சாட்டப்பட்டது.

வீடு ஒப்படைக்கும் தேதியை கட்டுமான நிறுவனம் மாற்றிக் கொண்டே செல்வது, வீடு வாங்கியவரின் உரிமையை பறிக்கும் செயல் எனவும் கோர்ட்டில் முறையிடப்பட்டது. கட்டுமான நிறுவனங்கள் தங்களது திட்டங்களுக்கு அரசிடமிருந்து அனைத்து அனுமதிகளையும் பெறாமல் வீடுகளை விற்பனை செய்ய தொடங்குவதாகவும், அந்த மனுவின் மூலம் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குடியிருப்புகளை வாங்குவதில் நுகர்வோரின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கட்டுமான நிறுவனங்கள் ஏராளமான ஒப்பந்தங்களை மேற்கொள்வதால் அதன் நடைமுறைகள் குறித்து அதிக அளவில் பொதுமக்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் வீடு வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் சீராக இருப்பது அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் நாடு முழுவதும் கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் வீடு வாங்குவோருக்கு இடையே ஒரே மாதிரியான விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அதை தொடர்ந்து  வீடுகளை வாங்குவதற்கு ஏற்ற மாதிரி விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தால் அதனை மாநில அரசுகள் கடைப்பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஅரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!
Next articleவாத்தி ரைடு மேற்கொண்ட முதல்வர்! தமிழகத்தின் அடுத்த அதிரடி இதுதான்!