9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

0
167
9 year old girl abused! Special court ruled in 9 days!
9 year old girl abused! Special court ruled in 9 days!

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கோட் ஹவடா என்ற பகுதியில் கமலேஷ் மீனா என்ற 25 வயது நபர் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை இந்த கயவன் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை கடந்த மாதம் 26ஆம் தேதி கமலேஷ் மீனா  வன்கொடுமை செய்துள்ளான்.

அதன் காரணமாக அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 26 ம் தேதி இரவு புகார் தரப்பட்டது. புகாரை அடுத்து துரிதமாக செயல்பட்ட போலிசார் குற்றவாளியை சிறிதும் தாமதமின்றி கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த காமுகன் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டான். எனவே அவன் மீது போக்சோ சட்டத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து அவன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் அந்த கமலேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. அதன் காரணமாக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விசாரணை ஐந்தே நாட்களில் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் 9 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விகாஷ் குமார் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளார். மேலும் குற்றவாளிக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அந்த காமுகனுக்கு வழக்கு நடைபெற்ற 9 நாட்களில் தீர்ப்பு வழங்கியது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் வரும் காலத்தில் இந்த மாதிரி குற்றங்கள் குறைவதற்கு கண்டிப்பாக வழிவகுக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதியை பாராட்டவும் செய்துள்ளனர்.

Previous articleபிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.!! இன்றைய முதல் புரோமோ.!!
Next articleஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சிஎஸ்கே அணியன் முக்கிய வீரர்.!!