உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி!
ஒரு மாதங்களில் நடைபெற இருக்கிறது தீபாவளி பண்டிகை.நமது தமிழகத்தில் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.குறிப்பாக தமிழகத்தில் மக்கள் தீபாவளி ஆண்டு பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.அவ்வாறு கொண்டாடும் வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று இருப்பதாலும், அதிகளவு புகை மாசு அடைவதாலும் 2 மணி நேரம் மட்டுமே மக்கள் பட்டாசுக்கள் வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.அதேபோல போலீசார் அதிக நேரம் பட்டாசுக்களை வெடிப்பது குறித்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் நடத்தினர்.
இவ்வாறு பட்டாசு வெடிப்பு நேரம் 2 மணி நேரம் என்பதால் மக்கள் அதிகளவு பட்டாசுக்களை வாங்க மாட்டார்.அதனால் பட்டாசு விற்பனையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பு நேரத்தை அதிகரிக்குமாறு கேட்டு வழக்கு தொடுத்தனர்.உச்சநீதிமன்றம் கூறியதாவது,உங்களது நலனை பார்த்தல் நாடு முழுவது மாசு கட்டுப்பாடு ஏற்படும் என்று கூறினார்கள்.அதுமட்டுமின்றி பட்டாசு தொழிலை நம்பி தான் 5 லட்ச குடும்பங்கள் இருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.மேலும் நாங்கள் மாசு படுத்தும் அளவிற்கு பட்டாசுக்களில் பேரியம் போன்ற ரசாயனங்கள உபயோகிக்கப்பது இல்லை என்று கூறினர்.
அதற்கு நீதிபதியோ,பட்டாசு உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமே பல முறைகேடுகளை மீறுவதாக கூறினார்.அவ்வாறு இருக்கையில் எவ்வாறு நேரத்தை அதிகரிக்க முடியும் என்று கேட்டனர்.அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள்,ஓர் சிலர் செய்யும் தவறுக்கு அனைவரையும் தண்டிப்பது நியாமற்றது.அதேபோல நாங்கள் பேரியம் ராசயனத்தை சேமித்து தான் வைத்துள்ளோம்.எதையும் உபோகிக்கவில்லை என்று கூறினர்.அதற்கு நீதிபதி அவர்கள்,இரசாயன பொருட்களை சேமித்து கூட வைக்க கூடாது என்று கூறினர்.அதுமட்டுமின்றி அவ்வாறு சேமித்து வைத்தால் அது குற்றாமாக கருத்தப்படும் என்று கூறி இந்த வழக்கை இம்மாதம் 26 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.