கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்! இது இல்லையென்றால் அனுமதிக்க மாட்டாது!

Photo of author

By Rupa

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்! இது இல்லையென்றால் அனுமதிக்க மாட்டாது!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி வாரி பிரம்மோற்சவம் அல்லது ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இவை மிகவும் திருப்தி விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனென்றால் பெருமாளை பெருமைப்படுத்தும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.அதுமட்டுமின்றி திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் மிகப் பெரிய விழா இதுவே. இந்த விழாவானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையில் நடைபெறும்.அதாவது புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இத்திருவிழாவின் போது கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் பல அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வெங்கடாஜலபதி சுவாமி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்.

அப்பொழுது வெங்கடாஜலபதியுடன் அவரது துணைவியார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் உற்சவமூர்த்தி சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படும். இந்த ஊர்வலத்தை காண  லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதிக்கு வருவர்.ஆனால் தற்போது கொரோனா  காலகட்டம் என்பதால் வெங்கடாஜலபதி சுவாமியை கோவிலின் உள்ளேயே சுற்றி வருகின்றனர். சென்ற வருடமும் ஒரு கொரோனா தொற்று என்பதால் அதன் விதிமுறைகளைக் கடைப்பிடித்து கோயிலின் உள்ளேயே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வெங்கடாஜலபதி சுவாமியை ஊர்வலமாக சுற்றி வந்தனர். அதே போலவே இந்த வருடமும் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழாவின் கொடியேற்றம் இன்று தொடங்கியது. இதனையடுத்து பிரம்மோற்சவ விழாவின்முக்கிய நிகழ்வுகளில் ஒன்றுதான் கருடசேவை. இந்த கருட சேவை 11ஆம் தேதி நடைபெறும் என கூறியுள்ளனர். இந்த பிரம்மோற்சவ விழாவின் போது திருப்பதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து காணப்படும்.மேலும் காலை மற்றும் மாலை கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சேவை புரிவார் எனக் கூறியுள்ளனர்.திருப்பது செல்லும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி ஏதும் இல்லாததால் கட்டாயம் அவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.