இந்த மாணவர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்! வகுப்புகளில் இருக்க முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லலாம்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. பள்ளி கல்லூரிகள் திறக்க நேரிட்டால் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க நேரிடும். அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். தற்பொழுது தொற்றானது கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதேபோல 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதல்வருடன் பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அவ்வாறு அறிவிப்பு வெளியிட்ட உடன் மக்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்து வருகிறார்.
- தீபாவளி பண்டிகை கழித்துதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிவித்த தேதியிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்தார்.அதனையடுத்து நேற்று திருச்சி மணப்பாறை அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது, புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் உடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெற்றோர்களும் அமர்ந்து கொள்ளலாம்.ஏனென்றால் குழந்தைகள் என்பதால் முகக்கவசம் விழக்கக்கூடும் தற்சமயம் கீழே கூட விழக்கூடும் அதனால் அவரது பெற்றோர்கள் கூட இருந்து கவனித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.அதேபோல் அதிக நேரம் முகக்கவசம் அணிந்து குழந்தைகளால் வகுப்பில் உட்கார முடியவில்லை என்றால் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறியிருக்கிறார். மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்பது அவசியமில்லை என்று தெரிவித்தார்.மாணவர்களின் நலனையே தமிழக அரசு விரும்பும் என்று கூறினார்.