லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!
அதிக அளவு அழுத்தம் உருவாகும் பொழுது அதன் சக்தியானது பெரும் அதிர்வுகளாக வெளியேற்றப்படும். 3 ரிக்டறுக்கு குறைவாக ஏற்பட்டால் நிலநடுக்கங்களை உணர்வது மிகவும் கடினம். 7 ரிக்டறுக்கு அதிகமாக ஏற்பட்டால் அது அதிக அளவு சேதத்தை உண்டாக்கும். அந்த வகையில்தான் நேற்று காலை மூன்றரை மணியளவில் பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பெரும் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 6.7 ரிக்டர் அளவுகோலில் அது பதிவாகியது.அதனால் பாகிஸ்தான் தென் மேற்கு பகுதி அதிகளவு பாதித்தது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 பேர் பலியாக நேர்ந்தது.
அதுமட்டுமின்றி 15 நிலக்கரியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களும் உள்ளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து மீளாத மக்களுக்கு அடுத்து பெரும் அதிர்ச்சி உன்னடனது,பாகிஸ்தானைபோலவே தற்பொழுது மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதுவும் பாகிஸ்தானை போலவே அதிகாலை நேரத்தில் ஏற்பட்டுள்ளது.நிலநடுகமானது மியான்மரில் தொடங்கி லடாக்கின் லியா பகுதியில் முடிந்துள்ளது . குறிப்பாக மியான்மரில் 5.5 ரிக்டர் ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து லடாக்கில் 3.5 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.
மியான்மரில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மியான்மரில் பதிவாகி உள்ளதால் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இங்கு உயிர் சேதம் நடைந்துள்ளதாக எந்த ஓர் செய்தியையும் வெளியிடவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு நாடாக தாக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலநடுக்கம் அடுத்து எந்த நாட்டை தாக்க போகிறது என்பது குறித்து பெரும் கேள்வியாக உள்ளது.மியான்மரில் அதிகளவு மக்களை பதித்துள்ளதால் அவ்வரசாங்கம் பாதித்த மக்களை மீட்க பல செயல்களை நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி தனிப்படை மீட்புப்பணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.