அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை
நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்தன.அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில் சமீக காலமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.ஆனால் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் அமலில் உள்ளது.இந்நிலையில் தான் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள், ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் எனதெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறியுள்ளார்.
மேலும் அவர் அப்போது கூறியதாவது,கொரோனா தாக்கத்தால் எக்ஸ்பிரஸ் ரயில்களில், முன்பதிவில்லா டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், முன்பதிவில்லா ரயில் டிக்கெட் அடுத்து ஓரிரு மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கொரோனாவால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலையானது 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே எந்த திட்டமிடலும் இல்லாமல் அடிக்கடி ரயிலில் வெளியூர் பயணம் செய்பவர்கள் தற்போதுள்ள முறையால் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இந்நிலையில் இந்த அறிவிப்பானது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.