மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்!

0
129
Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!
Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது. அவ்வாறு கொரோனா தொற்றால்  பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ 10 லட்சம் நிதி வழங்குவதாக கூறியது. இந்த நிதி உதவி பெற வேண்டும் என்றால் மத்திய அரசு கூறிய இந்த கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தால் மட்டுமே பெற முடியும்.

covid-19 இது ,பெரும் தொற்று என்று உலக சுகாதார அமைப்பு 11 .3 .2020 அன்று அறிவித்தது. இந்த தேதிக்கு அடுத்து இறந்த தாய் தந்தை அல்லது ஏதேனும் ஒருவர் (தாய் அல்லது தந்தை), சட்டப்படி தத்தெடுக்கபட்டவர் ஆகியோர் இந்த தேதிக்கு பின் உயிரிழந்திருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்த நிதி கிடைக்கும். அந்தவகையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் இறந்த தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது. அவ்வாறு உள்ளவர்கள் இந்த நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இருபத்திமூன்று வயதை அடையும்போது மொத்தமாக ரூ 10 லட்சம் பி எம் கேர்ஸ் திட்டம் மூலம் வழங்கப்படும். இந்த நிதியுதவி பெறும் குழந்தைகளுக்கும் அதிக அளவு சலுகைகள் காணப்படுகிறது. அதை கீழ்கண்டவற்றில்,

தினசரி பள்ளிக்கு வந்து செல்லும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா  பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.என்று கூறியுள்ளனர். அரசுப் பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் இந்த குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி இலவச சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதே போல தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் 12(1)c பிரிவின் கீழ் கல்வி கட்டணத்தில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சில சலுகைகளை குழந்தைகளால் பெற முடியாவிட்டால் பி எம் கேர்ஸ் திட்டத்திலிருந்து நிதிஉதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அதேபோல 11 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பள்ளிகளில் இடம் கிடைத்துள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்க வில்லை என்றால் இத்திட்டத்தை பயன்படுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா ஆகிய பள்ளிகள் மாவட்ட ஆட்சியரை சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் சுகாதார காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளராக சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். மொத்த நிதி தொகையும் அவர்களது சொந்த அஞ்சல் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் 18 வயது கடந்த இருபத்தி மூன்று வயதை அடையும்போது 10 லட்சத்தை அவர்கள் மொத்தமாக பெற முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.