ரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்!

ரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்!

ரயில் நிலையங்களில் பயணம் செய்வது நம்மில் பலருக்குப் பிடிக்கும். ஆனால் சிலர் பான், பாக்கு மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி விட்டு அப்படியே இருந்த இடத்திலேயே துப்பி விடுகின்றனர். அந்த செயலாகட்டும், அதன் கரையாகட்டும்  பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. அதன் கரைகள் எவ்வளவு தூய்மை செய்தாலும் நீக்குவது கடினமாக உள்ளது.

இதற்காக மட்டும் அதாவது அந்த கறைகளை அகற்றுவதற்காக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1200 கோடி ரூபாயும், அளவு கடந்த அளவு தண்ணீரும் செலவாகிறது. அதன் காரணமாகவும், அந்த செலவுகளை குறைக்கும் விதமாகவும் தற்போது இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக கையடக்க பை மற்றும் ஒரு பெட்டியை ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் இந்த பைகள் வழங்கப்படும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான ஒப்பந்தம் ஈசிஸ்பிட் என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கை அடக்க பைகள் ஐந்து ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், மூன்று வடிவங்களில் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பையை ஒரு நபர் 20 முறை பயன்படுத்தலாம் என்றும், ரயில்வே வளாகத்தில் இருக்கும் போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உபயோகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இந்த பைக்குள் ஒரு விதை இருக்கும். ஒரு நபர் இந்த பையை பயன்படுத்தி தூக்கி எறிந்த பிறகு அந்த விதையின் மூலமாக செடி வளரும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ரயில் நிலையங்களில் எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவதை தடுக்கும் விதமாக இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a Comment