நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது ஒவ்வொரு வருடமும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இந்த வருடம் கொரோனா காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவிலில் அனுமதி கிடையாது.
அதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு அனுமதி மறுக்கப்படுகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று முதல் 9-ம் திருநாளான 14 ஆம் தேதி வரை அரசின் வழிகாட்டு நெறி முறைகளுடன், தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து நவராத்திரியின் பத்து முதல் பன்னிரண்டாம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பத்தாம் திருநாள் வருகின்ற 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை எப்போதும் போல நடைபெறும் என்பதால், நள்ளிரவில் கோவில் முன்பாக நடைபெறும். ஆனால் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. எளிமையாக நடத்துகிறோம் என்று அறிவித்துள்ளது.