தொடர்ந்து 7-வது நாளாக அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
215

சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

இதனையடுத்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ரூ 101.53 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 97.26 ஆகவும் விற்பனையான நிலையில், இன்று 7ஆவது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.101.79க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.97.59கும் விற்பனையாகிறது.

Previous articleநான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு!
Next articleநவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here