பீஹார் அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரமாக ஆஸ்பத்திரியின் வாயிலில் அமர வைத்திருந்த அவலம் நடந்துள்ளது.
தானே பிவண்டியை சேர்ந்த பழங்குடி பெண் ரோகிணி மாருதி முக்னே (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ரோகிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தனர்.
அந்த பெண்ணுக்கு உடனடியாக இரத்த பரிசோதனை மேற்கொண்டு ரத்தம் செலுத்தினால் மட்டுமே பிரசவத்திற்கு அனுமதிப்போம் என்று கூறினார்.
இதனால் அந்த பெண் வாசல் படியினிலேயே அமரவைக்கப்பட்டார். வாசற்படியினிலே அமர்ந்து பிரசவ வலியினால் அலறி துடித்தார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அதனை கொஞ்சம் கூட கண்டுகொள்வதாய் தெரியவில்லை.
இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களுக்கு தெரிந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். உடனே ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் ராஜேஷ் மோரே சம்பவ இடத்திற்கு சென்று இரவு 10 மணியளவில் அந்த பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைப்பற்றி ராஜேஷ் மோரே கூறுகையில், தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியாது எனவும், இரவு 10 மணியளவில் சம்பவம் தெரியவந்து அந்த பெண்ணை உடனே அனுமதிக்க ஏற்பாடு செய்தேன் எனவும் கூறினார்.
பணம் இல்லாத காரணத்தினாலேயே ஏழைகள் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால் அரசின் கீழ் உள்ள மருத்துவமனையில் இவ்வாறு நடப்பது என்பது மிகவும் அதிர்ச்சிக்குளான அவல செய்தி!